நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம், 1:00 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
கனமழையாக கொட்டியதால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெருந்துறையில் நடந்த வாரச்சந்தையில், வியாபாரிகளும், மக்களும் சிரமத்துக்கு ஆளா-கினர்.* அந்தியூர் ரவுண்டானா அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர் மழையால், சந்தை வளாகம் சேறு, சகதியாகி விட்டது. டவுன் பஞ்., நிர்வாகம், சந்-தையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.