/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒருபக்கம் கனமழை; மறுபக்கம் துாறல் மாநகரில் வருண பகவான் 'டபுள் ரோல்'

ADDED : செப் 17, 2025 01:30 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று வழக்கத்தை விட காலை முதலே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை, 4:40 மணிக்கு கருமேகம் சூழ்ந்து துாறலாக மழை பெய்ய தொடங்கியது. பிறகு, 5:10 மணிக்கு இடி, மின்னலுடன் கனமழையாக மாறியது. பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, வீரப்பன்சத்திரம், செங்கோடம்பாளையம், திண்டல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேசமயம் வெட்டுக்காட்டு வலசு, நசியனுார் ரோடு, மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. மாலை நேரம் என்பதால், பள்ளி, கல்லுாரி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
கனமழையால் வணிக பகுதியான ஆர்.கே.வி ரோட்டில் குளம் போல் மழைநீர் தேங்க, வாகன ஓட்டிகள்
தத்தளித்தபடி சென்றனர்.
* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மந்தை, புதுக்காடு, வட்டக்காடு, ராமகவுண்டன் கொட்டாய், வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட், குரும்பபாளையம் மேடு உள்ளிட்ட இடங்களில், நேற்று மாலை, 4:00 மணி முதல், 4:30 மணி வரை மிதமான மழை பெய்தது.