/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு
/
மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு
ADDED : அக் 14, 2024 05:06 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில், ௫௨ மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்--11, கொடு-முடி-18, நம்பியூர், பெருந்துறை தலா-7, சென்னிமலை-26, பவானி-1.80, வரட்டுபள்ளம் அணை-2.80, கோபி-7.20, எலந்த-குட்டை மேடு-3, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம் அணை 1.60, பவானிசாகர்-1.40, தாளவாடியில்-8.10 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வரை லேசான மழை தொடர்ந்தது. கனமழையால் ஈரோடு-கரூர் பிரதான சாலை சாவடிபாளையத்தை அடுத்த ஆரியன்காடு ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டூவீலர், கார், ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஸ், லாரிகள் மட்டும் சென்று
வருகின்றன.