/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் ஆக்கிரமிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்
/
சென்னிமலையில் ஆக்கிரமிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னிமலையில் ஆக்கிரமிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னிமலையில் ஆக்கிரமிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 30, 2024 01:29 AM
சென்னிமலை, சென்னிமலை நகர பகுதியில், கடை வைத்திருப்பவர்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், ஒதுங்க கூட வழியில்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
சென்னிமலையில் காங்கேயம் ரோடு, மேற்கு ராஜா வீதி, தெற்கு ராஜா வீதி, சென்னிமலை மலை கோவில் செல்லும் பார்க்ரோடு, அடிவார பகுதி ஆகிய இடங்களில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாரம் தோறும் செவ்வாய் கிழமை சென்னிமலை மலை மீதுள்ள முருகனை தரிசனம் செய்ய பல ஊர்களில் இருந்து பைக், கார்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால், செவ்வாய் கிழமை போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் தடுமாறுகின்றனர். சென்னிமலை நகர பகுதிக்கு லாரிகள் வராமல் தடுக்க (ரிங் ரோடு) புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, சென்னிமலை நகர வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நகரில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் விபத்துகள் நடந்து வருகிறது. சென்னிமலை நகரில் கடை வைத்திருப்பவர்கள் கடை முன்புறம் நடைபாதையையும், மெயின் சாலையையும் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளானர்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர், போலீசார் இணைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.