/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வன்கொடுமை புகாரளிக்க உதவி மையம் அமைப்பு
/
வன்கொடுமை புகாரளிக்க உதவி மையம் அமைப்பு
ADDED : அக் 29, 2024 01:04 AM
வன்கொடுமை புகாரளிக்க
உதவி மையம் அமைப்பு
ஈரோடு, அக். 29-
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனை வழங்கவும் தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள், பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல், தீர்வுக்கு தேவையான உதவி தொடர்பான முறையீடுகளுக்கு உதவப்படும். இப்பிரச்னைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களான, 1800 2021 989 அல்லது, 144566 என்ற உதவி எண்ணில், அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் பணி நேரத்தில் அழைக்கலாம்.

