/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அதிக நெல் விளைச்சல் போட்டி: விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 14, 2024 01:25 AM
ஈரோடு, டிச. 14-
வேளாண் துறை மூலம், 2024-25ம் ஆண்டுக்கான நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து, மாநில அளவில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு, சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு, 7,000 ரூபாய் மதிப்பு பதக்கம் வழங்கப்படும்.
சொந்தமாக அல்லது குத்தகையாக குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். வயலில் குறைந்தபட்சம், 50 சென்ட் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை (சன்ன ரகம்) மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.
விருப்பம் உள்ள விவசாயி, வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 150 ரூபாய் செலுத்தி பதிவு செய்யலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.