/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பலத்த பாதுகாப்புடன் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: கவுன்டிங் மையத்துக்கு ௩ அடுக்கு பாதுகாப்பு
/
பலத்த பாதுகாப்புடன் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: கவுன்டிங் மையத்துக்கு ௩ அடுக்கு பாதுகாப்பு
பலத்த பாதுகாப்புடன் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: கவுன்டிங் மையத்துக்கு ௩ அடுக்கு பாதுகாப்பு
பலத்த பாதுகாப்புடன் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: கவுன்டிங் மையத்துக்கு ௩ அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்து, போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம் என, 6 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கி மாலை, 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.ஈரோடு, ராஜாஜிபுரத்தில் அதிக வாக்காளர்கள் மாலையில் குவிந்ததால், 40 பேருக்கு மட்டும், 6:00 மணிக்கு மேல் டோக்கன் வழங்கி, ஓட்டுப்பதிவு செய்ய வைத்தனர். ஈரோடு, சம்பத் நகரில் மதியம், 3:00 மணிக்கு ஒரு ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதாகி, ஓட்டை பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. 30 நிமிடங்களுக்குப்பின், வேறு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து முடிந்தது. வேறு எங்கும் குழப்பம் ஏற்படாமல், சரியாக மாலை, 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.இந்த இயந்திரங்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மூடி, சீல் வைத்து அந்தந்த மண்டல அலுவலர்கள் அனுமதியுடன், லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.ஈரோடு அடுத்த சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் இ.வி.எம்., உள்ளிட்ட இயந்திரங்களை பாதுகாப்பாக இறக்கி வைத்தனர். இந்த வாகனங்கள் செல்வதை, ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகள் மூலம், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தனர். இரவு, 8:00 மணிக்கு முதல் இ.வி.எம்.,கள் உள்ளிட்ட கருவிகள், ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில், ஒவ்வொரு தொகுதிக்கான பாதுகாப்பு அறையில், ஓட்டுச்சாவடி வாரியாக அவற்றை அடுக்கி வைக்கும் பணியை மேற்கொண்டனர். இப்பணியை முழுமையாக வீடியோப்பதிவு செய்தனர். அந்த அறையிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கண்காணிக்க துவங்கினர். அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில், வேட்பாளர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.அனைத்து இ.வி.எம்.,களும் வைக்கப்பட்ட பின், சீல் வைத்து அப்பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வர். அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய போலீசாரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கள் ஏற்படாத வகையில், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஷிப்ட் முறையில் தீயணைப்பு வீரர்கள், பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.இ.வி.எம்.,கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தை, தினமும் கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் வரும் ஜூன், 4 வரை கண்காணிப்பார்கள்.

