/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிவேக தனியார் பஸ் மோதியதில் பள்ளி மாணவ, மாணவியர் காயம்
/
அதிவேக தனியார் பஸ் மோதியதில் பள்ளி மாணவ, மாணவியர் காயம்
அதிவேக தனியார் பஸ் மோதியதில் பள்ளி மாணவ, மாணவியர் காயம்
அதிவேக தனியார் பஸ் மோதியதில் பள்ளி மாணவ, மாணவியர் காயம்
ADDED : பிப் 24, 2024 03:31 AM
ஈரோடு: ஈரோடு அருகே சூளை, வெள்ளாங்காடு, பெரியசேமூர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்த, 13 பள்ளி மாணவ, மாணவியர் ஆம்னி வேனில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கெங்கம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், வேனை இயக்குகிறார்.
நேற்று மாலை பள்ளி விட்டதும், மாணவ-மாணவியர், 13 பேரை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. சூளை பஸ் நிறுத்தம் அருகே, 4:55 மணிக்கு சென்றபோது, ஈரோட்டில் இருந்து பவானி சென்ற தனியார் எஸ்.ஆர்.பி.கே., என்ற தனியார் டவுன் பஸ், வேன் பின்புறம் வேகமாக மோதியது.
விபத்து நடந்த இடத்தில் பெரிய அளவிலான வேகத்தடை இருந்ததால், ஆம்னி வேன் துாக்கி வீசப்பட்டு, வெகுதுாரம் சென்று தலைகீழாக கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேனை நிமிர்த்தி, மாணவ, மாணவியரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சூளை பகுதியை சேர்ந்த, ௧௨ வயது மாணவன், 11 வயது முதல் ௧௩ வயது வரையிலான நான்கு மாணவியர் சற்றே பலத்த காயமடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.