/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பகுதி மாணவர்களால் 10ம் வகுப்பில் தேர்ச்சி சரிவு
/
மலைப்பகுதி மாணவர்களால் 10ம் வகுப்பில் தேர்ச்சி சரிவு
மலைப்பகுதி மாணவர்களால் 10ம் வகுப்பில் தேர்ச்சி சரிவு
மலைப்பகுதி மாணவர்களால் 10ம் வகுப்பில் தேர்ச்சி சரிவு
ADDED : மே 20, 2025 01:58 AM
ஈரோடு, மலைப்பகுதி மாணவ, மாணவியரால், 10ம் வகுப்பு பொது தேர்வில் ஈரோடு மாவட்ட தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.
நடப்பாண்டு ஈரோடு மாவட்டத்தில், 353 பள்ளிகளை சேர்ந்த, 24,146 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வெழுதினர். இதில், 23,181 பேர் தேர்ச்சி அடைந்தனர். 965 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாவட்டம், 96 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 11வது இடத்தை பிடித்தது. இதுபள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகாவை ஒட்டிய மலை கிராமங்களில் விருப்ப படமாக தமிழுக்கு பதில் இதுவரை கன்னட மொழியில் தேர்வெழுதினர். நடப்பாண்டு அரசு பள்ளிகளில் கட்டாயம் தமிழில் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இதனால் பலர் தமிழில் தேர்ச்சி பெறவில்லை. உதாரணமாக, 70 பேர் உள்ள ஒரு பள்ளியில், 66 பேர் தமிழில் தேர்ச்சி பெறவில்லை. குறிப்பாக தாளவாடி, பனஹள்ளி, சிக்கஹள்ளி மலை கிராமங்களில் பெரும்பாலான மாணவ, மாணவியர் கன்னட மொழியை விருப்ப பாடமாக எழுதுகின்றனர். இவர்களை தமிழில் தேர்வெழுத அறிவுறுத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் குறைய இதுவும் ஒரு காரணம். இது மட்டுமின்றி பல்வேறு காரணங்களாலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இவற்றை ஆராய்ந்து வரும் நாட்களில் தேர்ச்சி விகிதம் குறையாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.