/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இணை ஆணையர் மீது ஹிந்து முன்னணி புகார்
/
இணை ஆணையர் மீது ஹிந்து முன்னணி புகார்
ADDED : ஜன 29, 2026 04:28 AM
ஈரோடு: ஈரோடு ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் கார்த்தி, ஈரோடு எஸ்.பி.சுஜாதாவிடம் அளித்த மனு:
ஈரோடு, கருங்கல்பாளையம், ஓங்காளியம்மன் கோவிலில் மகா-மண்டபத்தின் மேற்கூரையில் கான்கிரீட் தாமரை வடிவ அலங்-காரம் அமைக்கப்பட்டு இருந்தது.
இதை அகற்ற வேண்டும் என, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி உத்தரவிட்-டுள்ளார். அகற்றினால் தான் கும்பாபிஷேகம் நடத்த அனும-திக்கப்படும் என்று மிரட்டியுள்ளார். அதன்பின் அகற்றப்பட்டது. இது ஆன்மிக அன்பர்களின் மனதை புண்படுத்துவதாக, ஆகம விதிக்கு எதிராக உள்ளது. வேண்டும் என்றே உள் நோக்கத்துடன் இடித்து அகற்ற உத்தரவிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

