/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : ஜன 29, 2026 04:28 AM
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., நீர் தேக்கும்அளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட பகு-தி
களில், பெய்யும் மழையே அணையின் நீர்வரத்துக்கு பிரதான-மாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கடந்த அக்டோபரில், 102 அடியை எட்டியது.
இதையடுத்து, அணையில் இருந்து, இரண்டாம் போக பாசனத்-திற்கு, கீழ்பவானி வாய்க்காலில், சுழற்ச்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்துள்ளது. நேற்று மாலை, அணைக்கு வினாடிக்கு, 255 கன அடி நீர் வந்தது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்-மட்டம், 92.76 அடி; நீர் இருப்பு, 23.4 டி.எம்.சி.யாக இருந்தது. அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 800 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

