ADDED : ஜன 08, 2026 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் குமரன் குன்று முருகன் கோவிலை பார்வையிட சென்ற, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது, போலீசாரின் அத்துமீறலை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஹிந்து முன்னணி சார்பில் நேற்று மாலை மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்தி தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல் முரளி உள்ளிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட, 31 பேர் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

