ADDED : மே 12, 2024 07:28 AM
ஈரோடு : ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி க.ச.இலக்கியஸ்ரீ, 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவியை பள்ளி பொருளாளர் அருண்குமார் பாலுசாமி, பள்ளி இயக்குனர் சிவப்பிரகாசம் ராமன், நிர்வாக இயக்குனர் வினோலா சிவப்பிரகாசம், முதல்வர் விவேகானந்தன், இடைநிலைப் பள்ளி முதல்வர் ஸ்ரீனிவாசன் வாழ்த்தினர்.
இப்பள்ளியில், 495க்கு மேல் மதிப்பெண் மேல் பள்ளி கட்டணத்தில், ௧௦௦ சதவீதமும், விடுதி கட்டணத்தில் 50 சதவீதமும் சலுகை தரப்படுகிறது.
490 மதிப்பெண்ணுக்கு மேல் பள்ளி கட்டணத்தில், 75 சதவீதம், விடுதி கட்டணத்தில், 25 சதவீதம்; 480க்கு மேல் பள்ளி கட்டணத்தில், 50 சதவீதம், விடுதி கட்டணத்தில், 10 சதவீதம்; 460க்கு மேல் பள்ளி கட்டணத்தில், 30 சதவீத சலுகை; 430க்கு மேல் பள்ளி கட்டணத்தில், 15 சதவீதமும், 400க்கு மேல் ஐந்து சதவீத கட்டணமும் சலுகை வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.