மாற்றுத்திறன் ஆசிரியர் புகாரால் ஹெச்.எம்.,மிடம் விளக்கம் கேட்பு
மாற்றுத்திறன் ஆசிரியர் புகாரால் ஹெச்.எம்.,மிடம் விளக்கம் கேட்பு
ADDED : ஜூன் 15, 2026 04:13 AM
ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.எம். மகளிர் அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறன் ஆசிரியர்களான சத்யாவதி, கந்தமணி ஆகியோர், கடந்த, 11ல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, தங்களை மனம் புண்படும்படியாக பேசுகிறார். முதல் தளத்தில் வகுப்பு வைத்துள்ளார். மாற்று திறனாளிகளாகிய எங்களால் முதல் தளம் செல்வது சிரமமாக உள்ளது. வகு ப்புகளை தரை தளத்துக்கு மாற்ற வேண்டும். மனம் புண்படும்படியாக பேசும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் தலைமை ஆசிரியை இந்திராணியிடம், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இந்திராணி மீது, ஆசிரியைகளை மனம் புண்படும்படி பேசுவதாக, 34 ஆசிரியைகள் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
