ADDED : ஜூன் 15, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சித்தோடு வாசவி கல்லுாரி அருகில் உள்ள, கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி, வரும், 23ம் தேதி முதல் ஜூலை, 27ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது.
ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். கிராம பஞ்சாயத்தை சேர்ந்த, 19 வயதுக்கு மேல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்வது அவசியம். 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
