/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோட்டக்கலை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தோட்டக்கலை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 01:27 AM
ஈரோடு, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர்கள் சாந்தி, பார்த்திபன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, 'யூ.ஏ.டி.டி-2.0' அரசாணையை வெளியிட்டுள்ளது.இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும். இத்துறை அலுவலர்களை பிற துறையுடன் இணைக்கும்போது விவசாயம் பாதிக்கும். கள பணியாளர்களை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
அரசாணைப்படி, உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தால், தானிய, மானாவாரி பயிர் சாகுபடி பரப்பை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளதால், தோட்டக்கலை விவசாயிகள் பாதிப்பார்கள். அவர்களுக்கு போதிய தொழில் நுட்பங்களை வழங்க இயலாது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

