/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
23, 24ல் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி
/
23, 24ல் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி
ADDED : ஆக 22, 2025 01:11 AM
ஈரோடு, தமிழ்நாடு கிரடாய் இணை செயலாளர் சதாசிவம், ஈரோடு கிரடாய் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் மாணிக்கம் ஆகியோர் கூறியதாவது:
இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பான, ஈரோடு கிரடாய் அமைப்பின் சார்பில், பெருந்துறை ரோட்டில் உள்ள டர்மரிக் ஓட்டலில், நாளை, 24ம் தேதி என இருநாட்கள், வீடு, வீட்டுமனை கண்காட்சி நடக்கிறது.
தினமும் காலை, 10:௦௦ மணிக்கு தொடங்கி இரவு, 8:௦௦ மணி வரை நடக்கும். கண்காட்சியை வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.
கண்காட்சியை பார்வையிட வருபவர்களில் மூன்று பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயம் வழங்கப்படும். கடன் நிதி ஆலோசனை வழங்க எஸ்.பி.ஐ., வங்கி மூலம் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. வீடு புக் செய்வோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும். இவ்வாறு கூறினர். பேட்டியின்போது கண்காட்சி பொறுப்பாளர் ஜெயப்பிரசாத் உடனிருந்தார்.