/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கசிவால் வீட்டில் தீ விபத்து; நகைகள், பொருட்கள் கருகின
/
மின் கசிவால் வீட்டில் தீ விபத்து; நகைகள், பொருட்கள் கருகின
மின் கசிவால் வீட்டில் தீ விபத்து; நகைகள், பொருட்கள் கருகின
மின் கசிவால் வீட்டில் தீ விபத்து; நகைகள், பொருட்கள் கருகின
ADDED : ஆக 22, 2024 03:42 AM
ஈரோடு: ஈரோட்டில், ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தங்கம், வெள்ளி மற்றும் பொருட்கள் கருகின.
ஈரோடு, வீரப்பம்பாளையத்தை சேர்ந்த மாது மனைவி மல்லிகா, 45, வீட்டு வேலை செய்கிறார். நல்லசிவம் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை, 8:45 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். 9:45 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றியும் அணைக்க முடியவில்லை.
தகவலறிந்த மின் வாரியத்தினர், மின் வினியோகத்தை துண்டித்தனர். பின்னர் ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பீரோ, ப்ரிட்ஜ், துணி மணிகள், 10 கிராம் வெள்ளி, ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் அட்டை, நில பத்திரம், மூன்று பவுன் தங்க செயின் மற்றும் 13 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கத்தின் ஒரு பகுதி ஆகியவை தீக்கிரையானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.