ADDED : ஆக 24, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர்
அருகே எண்ணமங்கலம் விராலிகாட்டூரை சேர்ந்தவர் சின்னச்சாமி, 70,
கூலி தொழிலாளி. தகர சீட் வேய்ந்த வீட்டில் வசிக்கிறார். நேற்று அதிகாலை
வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர்
தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனாலும் தீ பரவியதால் அந்தியூர்
தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர்
தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த
பீரோ, துணி உள்ளிட்டவைஎரிந்து சாம்பலானது.
