ADDED : ஆக 24, 2026 05:42 AM

ஈரோடு:திறன்
மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில், ஈரோடு ஜெம் அண்ட்
ஜுவல்லரி டிரெனிங் சென்டரில், மேட்டூர் ரோடு திருச்சி கபே அருகில் உள்ள
பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
அளிக்கப்படுகிறது. வரும் செப்., 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை பயிற்சி
நடக்கிறது.
பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை,
கொள்முதல் செய்யும் முறை. உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை
வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண்
இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது
8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ்
வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும்
தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை
மதிப்பீட்டாளாராகவும் பணியில் சேரலாம்.
பயிற்சியில் சேர
விரும்புவர்கள் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ. முகவரிச் சான்றிதழ், கல்வி
சான்றிதழ். மற்றும் பயிற்சி கட்டணம், 8,500 ரூபாய்- மட்டுமே. கூடுதல்
விபரங்களுக்கு, 94437 28438 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
