/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
30 நாளும் மீட்டிங்கில் இருந்தால் மக்கள் பிரச்னை எப்படி தீரும்? மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சாடல்
/
30 நாளும் மீட்டிங்கில் இருந்தால் மக்கள் பிரச்னை எப்படி தீரும்? மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சாடல்
30 நாளும் மீட்டிங்கில் இருந்தால் மக்கள் பிரச்னை எப்படி தீரும்? மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சாடல்
30 நாளும் மீட்டிங்கில் இருந்தால் மக்கள் பிரச்னை எப்படி தீரும்? மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சாடல்
ADDED : செப் 27, 2025 01:11 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் செல்வராஜ், ஆணையர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட, 49 தீர்மானங்களில், 48 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோர நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சாலைகளிலும் வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மரப்பாலம் பகுதியில் மருத்துவர் இன்றி மூடப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு வரும் மக்களுக்கு அமைச்சர் உணவு ஏற்பாடு செய்கிறார். ஆனால், மாநராட்சி சார்பில் போடப்படும் சாமியானா பந்தலுக்கு, 3 லட்சம் ரூபாய் செலவானதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள். இதற்கு மூன்று லட்சம் ஆகுமா?
அதிகாரிகள் பதில்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமுக்கு சாமியானா, டேபிள், சேர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தான் மூன்று லட்சம் செலவாகிறது. சாமியானாவுக்கு மட்டுமில்லை. ஆர்.கே.வி.ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை கடிதம் கொடுத்துள்ளதால் அடுத்த வாரம் அகற்றப்படும். நடைபாதை ஆக்கிரமிப்புகளும் ஆய்வு செய்து அகற்றப்படும்.
அதிகாரிகள் அலட்சியம்
வார்டுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டால், வேறொரு அதிகாரியை அழைத்து பேசுமாறு கூறுகின்றனர். இப்படியே மாறி, மாறி சொல்கிறார்களே தவிர, பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை. எப்போது கேட்டாலும் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார்கள். மாதத்தில், 30 நாளும் மீட்டிங் இருந்தால், மக்கள் பிரச்னையை தீர்ப்பது எப்படி? சின்ன மார்க்கெட் ஏலம் எடுத்தவர் வியாபாரிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று கவுன்சிலர்கள் பேசினர்.
அதிகாரிகள் பதில்: ஏற்கெனவே சின்னமார்க்கெட் ஏலம் எடுத்த நபரிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மீண்டும் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

