ADDED : செப் 20, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானியில்
மனுநீதி நாள் முகாம்
பவானி, செப். 20-
பவானி அருகே சன்னியாசிப்பட்டியில், மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். முகாமில் ஐந்து பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ஏழு பயனாளிகளுக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில், 107 பயனாளிகளுக்கு, ௪.86 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடை, வேளாண்மை உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார். தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், பவானி தாசில்தார் சித்ரா, பவானி யூனியன் சேர்மேன் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.