/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் முற்றுகை
/
நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர் முற்றுகை
ADDED : அக் 08, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகர் யூனியனுக்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர். முறையாக வேலை வழங்காததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பவானிசாகர் யூனியன் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.