/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது
/
மனைவி முகத்தில் சுடுநீரை ஊற்றிய கணவன் கைது
ADDED : மே 27, 2025 01:46 AM
ஈரோடு,ஈரோடு, சூரம்பட்டி, திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கிருபாகரன், 34, பி.இ., பட்டதாரி. ஈரோட்டில் பிரபல தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி சுவாதிகா, 28; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னையால் தர்மபுரியில் உள்ள பெற்றோர் வீட்டில் சுவாதிகா ஓராண்டாக இருந்தார்.
ஒரு வாரத்துக்கு முன் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார். இந்நிலையில் சுவாதிகாவை தோசை கரண்டியால் கன்னத்தில் அடித்து, சுடுநீரை முகத்தில் ஊற்றியுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தவர், சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார் கிருபாகரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.