/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவியை கிணற்றுக்குள் தள்ளிய கணவன் கைது
/
மனைவியை கிணற்றுக்குள் தள்ளிய கணவன் கைது
ADDED : அக் 12, 2024 07:21 AM
காங்கேயம்: மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் அபிபுல்லாகான், 33; இவரின் மனைவி சினேகா கான், 30; இருவரும் குழந்தைகளுடன்,
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சிக்கரசம்பாளையத்தில், தேங்காய் உலர் களத்தில் வேலை பார்க்கின்றனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த அபிபுல்லாகான், 50 அடி ஆழ கிணற்றுக்குள், கடந்த, ௫ம் தேதி அவரை தள்ளிவிட்டுள்ளார். பின் குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். புதர் மண்டிய கிணற்றுக்குள் தண்ணீர் இல்லை. சினேகாகான்
கூச்சல் போட்டும் சத்தம் யாருக்கும் சரியாக கேட்கவில்லை. மூன்று நாட்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில், அவ்வழியாக வந்த ஒருவர் சத்தம் கேட்டு, காங்கேயம் போலீசுக்கு தகவல்
தெரிவித்தார். காங்கேயம் தீயணைப்புதுறையினர் உதவியுடன் பெண்ணை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனை அனுப்பினர்.
கொல்கத்தாவில் பதுங்கியிருந்த அபிபுல்லாகானை, கைது செய்து காங்கேயம் அழைத்து வந்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி
கோவை சிறையில் அடைத்தனர்.