ADDED : நவ 23, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் தனலட்சுமி, 37; தனியார் நிறுவன தொழிலாளி. இவரின் கணவர் சிவநாதன், 40; தனியார் நிறுவன டிரைவர். மனைவியுடன், 2023ல் ஏற்பட்ட பிரச்னையில், பெருந்துறை மகளிர் போலீசார் சமாதானம் பேசி, சிவநாதனை மீண்டும் சேர செய்தனர். இந்நிலையில் சிவநாதன்
மீண்டும் மாயமாகி விட்டதாக, தனலட்சுமி புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு முனிசிபல் காலனி சத்யா வீதியை சேர்ந்த ராமசேகர் மகன் கவுதமராஜா, 23; ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்தார். தாயிடம் பேசாமல் மன விரக்தியில் இருந்துள்ளார். கடந்த, 20ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் ராதா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

