/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழில் முனைவோராக மகளிருக்கு அழைப்பு
/
தொழில் முனைவோராக மகளிருக்கு அழைப்பு
ADDED : நவ 23, 2025 12:58 AM
ஈரோடு, தமிழக பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்க, மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர், திருநங்கைகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, தொழில் திறன் சார் பயிற்சி வழங்கி, 10 லட்சம் ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்படும். தொகையில், 25 சதவீதம் அல்லது 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
உற்பத்தி, சேவை, வணிக தொழிலாக துவங்கலாம். 18 முதல், 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள், திட்ட அறிக்கை, விலைப்புள்ளி உள்ளிட்ட அனைத்து விபரங்களுடன், www.msmeonline.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாக அல்லது 0424 2275440 என்ற எண்ணில் அணுகலாம்.

