ADDED : நவ 23, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், ஈரோடு முன்னாள் படை வீரர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசு அமலாக்கி உள்ள தொழிலுறவு சட்ட தொகுப்பு, சம்பள சட்ட தொகுப்பு, தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு, சமூக பாதுகாப்பு சட்டத்தொகுப்பு என நான்கு சட்டத்தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். இந்த மாற்றம் தொழிற்சாலை நிர்வாகத்துக்கே சாதகம். தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாது. எனவே சட்ட தொகுப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

