/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலரை 'லவட்டிய' ஆசாமி 'சிசிடிவி'யால் அம்பலம்
/
டூவீலரை 'லவட்டிய' ஆசாமி 'சிசிடிவி'யால் அம்பலம்
ADDED : நவ 23, 2025 12:57 AM
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 25; புளியம்பட்டி-சத்தி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார்.
பல்சர் பைக்கை, கடந்த 19ம் தேதி இரவு பட்டறை முன்பு நிறுத்தியிருந்தார். வேலை முடிந்து சென்ற போது காணவில்லை. அவர் புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் ஒரு கடை முன்புறம் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆசாமி ஒருவர் பைக்கை தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
மேலும் கோவை சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே, கொள்ளையனின் கூட்டாளி மற்றொரு பைக்கில் டோவ் செய்து கொண்டு செல்லும் காட்சியும் கிடைத்தது. இரு காட்சிகளையும், சந்தோஷ்தான் போலீசில் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

