/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி, குழந்தை மாயம் போலீசில் கணவர் புகார்
/
மனைவி, குழந்தை மாயம் போலீசில் கணவர் புகார்
ADDED : செப் 16, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி, மேற்கு கண்ணார வீதியை சேர்ந்தவர் செல்லதுரை, 25. இவர், சித்தோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதாஞ்சலி, 20. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த 11ம் தேதி செல்லதுரை வேலை முடிந்து, மறுநாள் காலை, வீட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டி இருந்தது. அவரது மனைவி, குழந்தையை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், பவானி போலீசில் புகார் செய்தார்.