ADDED : ஜூன் 05, 2025 01:30 AM
சத்தியமங்கலம், கடம்பூரை அடுத்த எக்கத்துாரை சேர்ந்தவர் மூர்த்தி, 32, இவரது மனைவி சிவகாமி. இரண்டு மாதங்களுக்கு முன்பு, கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீடான அரிகியத்திற்கு சிவகாமி சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த, 28ம் தேதி சிவகாமியை கூட்டி வருவதற்காக மூர்த்தி அரிகியம் சென்றார். மறுநாள் காலை பஸ்சில் வந்து விடுமாறு, சிவகாமியிடம் கூறி விட்டு சென்று விட்டார். அன்று மாலை வீட்டில் வந்து பார்த்த போது மூர்த்தியை காணவில்லை.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மூர்த்தியை தேடி சென்ற போது, அவரின் பைக் மட்டும் அரிகியம் வனப்பகுதியையொட்டிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் வனப்பகுதியில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. காணாமல் போன கணவரை கண்டு
பிடித்து தரக்கோரி, கடம்பூர் போலீசில் சிவகாமி புகாரளித்தார்.