/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் சரண்டர்
/
பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய கணவர் சரண்டர்
ADDED : நவ 05, 2025 01:01 AM
சென்னிமலை சென்னிமலை முருங்கத்தொழுவு ஊராட்சி, சல்லிமேடு பகுதியில் வசிப்பவர் பேபி, 32; இவர் கணவர் கார்த்தி, 36; இருவரும் குடும்ப தகராறால் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். பேபி தனது அக்கா ரம்யாவின் கணவர் பூபதி வீட்டில் வசிக்கிறார். பேபியின் மகன் ஜஸ்வந்த், 11; இரு வருடங்களாக தந்தை பொறுப்பில் உள்ளார்.
நேற்று முன்தினம் தனது தாய் புஷ்பாவுடன் தலவுமலை சென்று விட்டு வீட்டுக்கு, மொபட்டில் பேபி சென்றார். தலவுமலை-கே.சி.வலசு ரோட்டில் வந்தபோது, கார்த்தி பைக்கில் சென்று வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பைக் டேங்க் கவரில் வைத்திருந்த ஊக்கு கம்பியால், பேபியின் இடது பக்க தொடை, இடது தோள்பட்டை, இடது கை முழங்கை மற்றும் தலையின் பின்பக்கம் சரமாரியாக குத்தினார். அதிர்ச்சி அடைந்த தாய் புஷ்பா, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மகளை சேர்த்தார். தாக்குதல் நடத்திய கணவர் கார்த்தி, சென்னிமலை போலீஸில் சரணடைந்தார். சென்னிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

