/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர் மீது லாரி மோதி பேக்கரி ஊழியர் பலி
/
டூவீலர் மீது லாரி மோதி பேக்கரி ஊழியர் பலி
ADDED : நவ 05, 2025 01:01 AM
புன்செய்புளியம்பட்டி, கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாசில், 25; புன்செய் புளியம்பட்டியில் ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் நண்பரை புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் பேக்கரிக்கு யமஹா எப் இசட் பைக்கில் சென்றார்.
சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே வளைவில் திரும்பிய போது, எதிரே திருப்பூர் நோக்கி வந்த சர்க்கரை பாரம் ஏற்றிய லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட பாசில் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். விபத்தில் பைக் உருக்குலைந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து லாரி ஓட்டுநரான சத்தியமங்கலத்தை சேர்ந்த சையது இப்ராகிமிடம், 49, விசாரணை நடத்தி வருகின்றனர்.

