/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏற்காடு அதிவிரைவு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வணிகர்கள் மனு
/
ஏற்காடு அதிவிரைவு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வணிகர்கள் மனு
ஏற்காடு அதிவிரைவு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வணிகர்கள் மனு
ஏற்காடு அதிவிரைவு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வணிகர்கள் மனு
ADDED : நவ 05, 2025 01:54 AM
ஈரோடு, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு தினமும் ஏற்காடு அதி விரைவு ரயில் இரவு, 9:00 மணிக்கு புறப்படுகிறது. சென்னைக்கு அதிகாலை, 3:30 மணியளவில் சென்றடைகிறது. பயணிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வசதி கருதி ரயிலின் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் வந்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் மனு கொடுக்கப்பட்டது.
மனு விபரம்: ஏற்காடு அதி விரைவு ரயில் இரவு, 10:00 மணிக்கு பிறகு புறப்படும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
தற்போது சென்னைக்கு அதிகாலை 3:30 மணியளவில் செல்கிறது. அங்கு மின்சார ரயில், பஸ் உள்ளிட்டவற்றில் பயணிக்க, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் கோவை-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ் நள்ளிரவு, 11:55 மணிக்கு தான் ஈரோடு வருகிறது. கோவை-சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், 12:25 மணிக்கு ஈரோடு வருகிறது.
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இரவு, 9:00 மணிக்கு பின், 3 மணி நேரம் கழித்தே ரயில் சேவை உள்ளது.
நீண்ட இடைவெளி இருப்பதால் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து தரப்பு பயணிகளுக்கும் ஏற்ற வகையில் இரவு, 10:00 மணிக்கு பின் ஏற்காடு அதி விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன் கூட்டியே ஈரோடு வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளனர்.

