/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன்
/
மனைவி முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன்
ADDED : ஜூன் 13, 2025 01:29 AM
கோபி, திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலை சேர்ந்தவர் கருப்பையா, 45; இவரின் மனைவி மகேஸ்வரி, 39; தம்பதிக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். ஊர் ஊராக சென்று பிளாஸ்டிக் வியாபாரம் செய்து, அந்த ஊரில் தங்கியும் வந்தனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
கடந்த, 10ம் தேதி, கோபி அருகே குஞ்சரமடை கிராமத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு, அங்குள்ள சந்தை திடலில் மகேஸ்வரி துாங்கி கொண்டிருந்தார். மகேஸ்வரி முகத்தில் கெமிக்கல் திரவத்தை ஊற்றி விட்டு கருப்பையா தப்பி ஓடியுள்ளார்.
மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகேஸ்வரி புகாரின்படி கருப்பையா மீது, திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.