/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேங்காய் எண்ணெயை 'மோராக' மாற்றிய பனி
/
தேங்காய் எண்ணெயை 'மோராக' மாற்றிய பனி
ADDED : டிச 29, 2025 09:44 AM
கோபி: மார்கழி மாதம் பிறந்த முதலே, கோபியில் பனிப்பொழிவு அதிகரித்து விட்டது. கடந்த ஆண்-டுகளை ஒப்பிடுகையில் நடப்பாண்டு, பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் தலையில் தேய்க்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், பாட்டில்களில் உறைந்து விடுகிறது. தணலில் காட்டி சூடு செய்த பிறகே எண்ணெயா-கிறது. இந்நிலையில் கோபி அருகே மொடச்சூரில் தினமும் அதிகாலை உழவர் சந்தை கூடுகிறது.
ஒரு சில விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய் எண்ணெயை பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதுவும் தற்போது உறைந்து, மோர் பாட்டில் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பல வாடிக்கையாளர்கள், சந்தேகத்துடன் மோரா என கேட்பதாகவும், விவ-சாயிகள் தெரிவித்தனர். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய், 380 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

