/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற யோசனை
/
பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற யோசனை
ADDED : ஜூலை 06, 2025 01:08 AM
ஈரோடு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள், குழுவினர் பொருளாதார மேம்பாடு அடையும் நோக்கில் சிறு தொழில், வியாபாரம் செய்ய தனி நபர் கடன், குழு கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள், தனி நபர் மற்றும் குழுவினர் கடன் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன், ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2260255 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.