/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கால்நடை தீவன பற்றாக்குறையை தடுக்க ஊறுகாய் புல் உற்பத்திக்கு யோசனை
/
கால்நடை தீவன பற்றாக்குறையை தடுக்க ஊறுகாய் புல் உற்பத்திக்கு யோசனை
கால்நடை தீவன பற்றாக்குறையை தடுக்க ஊறுகாய் புல் உற்பத்திக்கு யோசனை
கால்நடை தீவன பற்றாக்குறையை தடுக்க ஊறுகாய் புல் உற்பத்திக்கு யோசனை
ADDED : நவ 21, 2024 01:34 AM
கால்நடை தீவன பற்றாக்குறையை தடுக்க
ஊறுகாய் புல் உற்பத்திக்கு யோசனை
ஈரோடு, நவ. 21-
ஈரோடு மாவட்ட, வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் சரவணன் வெளியிட்ட அறிக்கை:
தீவன பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க இயலாத நிலையில், சத்துக்கள் குறைந்த கால்நடை தீவனங்களை வழங்குவதால், பால் உற்பத்தி திறன் குறையும். அதற்கு மாற்றாக, ஊறுகாய் புல் தயாரித்து, பற்றாக்குறை, வறட்சி காலங்களில் வழங்கலாம். ஊறுகாய் புல் என்பது, தரையில் குழிவெட்டி, தீவன பயிர்களை போட்டு, காற்று புகாமல் மூடி திடப்படுத்தும் பசுந்தீவனமே, ஊறுகாய் புல்லாகும். ஊறுகாய் புல் செய்ய ஈரப்பதம் குறைவாக உள்ள, பசுந்தீவனங்களை தேர்வு செய்வது நல்ல பலன் தரும். தானிய வகை பசுந்தீவனம் சோளம், மக்காசோளம், பயறு வகை பசுந்தீவனமான வேலி மசால், குதிரை மசால், தட்டை பயிறு போன்றவை உகந்தவை. ஈரப்பதம் அதிகம் உள்ள பசுந்தீவனங்களை பயன்படுத்தினால், அவற்றை நிழலில் உலர்த்தி பயன்படுத்தலாம்.
பசுந்தீவனம் கிடைக்கும் அளவுக்கு, அதற்கேற்ப குழி அமைத்து, ஒரு கனஅடி பாகமானது, 30 கிலோ பசுந்தீவனத்தை பயன்படுத்த உதவும். தீவனத்தை அரை அடி முதல் அடுக்கடுக்காக பரப்ப வேண்டும். அதனுடன் அரை கிலோ உப்பு, 2 கிலோ வெல்லம் துாவ வேண்டும். இதே முறையில், மீண்டும் மீண்டும் அடுக்கி, அக்குழியை மண்ணால் நன்கு பூசி, பாலிதீன் பைகளை பரப்ப வேண்டும். 3 மாதம் கழித்து எடுத்து, கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம்.கரும்பு தோகை, அறுவடை செய்த பின் உள்ள கேழ்வரகு தாள், சோளத்தட்டு போன்றவை மூலமும் ஊறுகாய் புல் தயாரிக்கலாம். இவை தீவன பற்றாக்குறை காலத்தில், கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகவும், பால் வளத்தை பெருக்கவும் உதவும். இவ்வாறு கூறியுள்ளார்.