/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோலார் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க யோசனை
/
சோலார் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க யோசனை
ADDED : பிப் 28, 2024 01:59 AM
ஈரோடு:பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுபற்றி ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பிரதமரின்
சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் மானியமாக, 1 கிலோ வாட்டுக்கு,
30,000 ரூபாய், 2 கிலோ வாட்டுக்கு, 60,000 ரூபாய், 3 கிலோ வாட்டுக்கு,
78,000 ரூபாய் வழங்கப்படும்.
இதற்கான மானியம் நுகர்வோரின் வங்கி
கணக்கில் திட்டப்பணி முடிந்த, 7 முதல் 30 நாளுக்குள் செலுத்தப்படும். 1
கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாள், 4 முதல், 5 யூனிட் வரை மின்சாரம்
உற்பத்தி செய்யும். திட்டத்தில் விண்ணப்பிக்க registration
pmsuyaghar.gov.in, www.pmsuryaghar.gov.in, www.solarrofftop.gov.in ஆகிய
இணைய தளங்களில், 'PM suryaghar', 'QRT PM Surya Ghar' ஆகிய ஆப் மூலமும்
பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு மின் பகிர்மான வட்ட
அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

