ADDED : நவ 23, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய, 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா, 37,000 ரூபாய்; 50 கன்னியாஸ்திரிகள், சகோதரிகளுக்கு தலா, 60,000 ரூபாய் வீதம் நேரடி மானியம் பெறும் திட்டத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும், 2026 பிப்., 28க்குள் உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

