தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுபட்டோருக்கு யோசனை

மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுபட்டோருக்கு யோசனை

மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுபட்டோருக்கு யோசனை


ADDED : ஆக 29, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் கடந்த, 1ல் துவங்கி வரும், 30 வரை நடக்கிறது. இதில் வீடுகள் கணக்கெடுப்பு பணி, வீடுகள் தொகுப்பு பணிகள் நடக்கிறது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், வளையக்கார வீதி, கள்ளுக்கடைமேடு, பட்டக்கார வீதி, நடராஜா தியேட்டர் ஹவுசிங் யூனிட் குடியிருப்பு போன்ற பகுதிகளில் நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். கணக்கெடுப்பு விபரத்தை, அரசு வழங்கிய மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விபரம், தரவுகளின் துல்லியம், கணக்கெடுப்பு நடைமுறைகளை உறுதி செய்தார்.

தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணியாளர்கள் எவரும் வரவில்லை, தங்கள் வீடு கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் அந்த விபரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் நேரில் அல்லது, 0424 2260211 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us