பாடத்திட்டத்தில் ஜனநாயகம், தேர்தல் முறை அவசியம்: காங்., - எம்.பி., வலியுறுத்தல்
பாடத்திட்டத்தில் ஜனநாயகம், தேர்தல் முறை அவசியம்: காங்., - எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2026 06:47 AM
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில், 'யங் இந்தியன்ஸ் பார்லிமென்ட்' நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர்
கந்தசாமி தலைமை வகித்தார். கரூர் எம்.பி., ஜோதிமணி முன்னிலை
வகித்தார். தமிழகத்தில், 18 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட, 200
மாணவ, மாணவியர் பங்கேற்று, பாராளுமன்ற நடைமுறை, விவாதங்களை
செயல்படுத்தினர். இதில் தேர்வாகும் மாணவர்கள், டில்லியில் நடக்க
உள்ள, 'யங் இந்தியன்ஸ் பார்லிமென்ட்' நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
நிகழ்வுக்கு பின், கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போதுள்ள
ஜனநாயக அமைப்பு நடைமுறையை மாற்றி, உள்ளாட்சி முதல்,
எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களை மக்கள் சந்திக்க வேண்டும். என்ன
நடக்கிறது என்பதை அறியவும், கேள்வி கேட்கவும் வாய்ப்பு தரும்படி
பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சிகள் அமைய வேண்டும் என
எதிர்பார்க்கிறோம். அதற்காகத்தான் மாணவர்கள் அறியும்படி 'மாணவர்
பாராளுமன்றம்' நடத்தப்படுகிறது.
சி.ஐ.ஐ.,யின் 'யங் இந்தியா'
அமைப்பு மூலம், மாவட்ட அளவில் தேர்வு செய்த, 200 மாணவர்களை கொண்டு,
'மாதிரி பார்லிமென்ட்' அமைத்து, பிரதமரே தேர்வு செய்தல், விவாதம்,
கேள்வி நேரம் உள்ளிட்டவைகளை நடத்தி காட்டினர். தேசிய அளவில், கல்வி
முறையில் மாணவர்களுக்கு திருப்தி இல்லாத நிலையை பார்க்கிறோம். கல்வி
முறை நீண்ட காலமாக மறுசீரமைக்கவில்லை. கல்வி முறையில், சட்டசபை,
பார்லிமென்ட், உள்ளாட்சி அமைப்பு செயல்பாடு, வாக்காளர் முறை ஒரு
அங்கமாக இருக்க வேண்டும்.
அரசியல் அமைப்பு பற்றி, முழுமையாக பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். ஜனநாய
கம்
பற்றி கட்டாயம் அறிய வேண்டும். தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை
அமைச்சரை சந்தித்து, தமிழக கல்வியில் ஜனநாயகம், தேர்தல் முறை உட்பட
அரசியல் சார்ந்தவை, பாலின சமத்துவம் பாடத்திட்டமாக கொண்டு வர
வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு கூறினார்.
