/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட ஐ.ஜி.,
/
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட ஐ.ஜி.,
ADDED : செப் 17, 2024 07:28 AM
ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட போலீசாருடனான கலந்தாய்வு கூட்டம், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்.பி., ஜவகர் முன்னிலை வகித்தார்.
நடப்பாண்டில் நடந்த குற்ற சம்பவங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்து, கோப்புகளை ஐ.ஜி., பார்வையிட்டார். போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகங்கள், எஸ்.பி., அலுவலகத்துக்கு வரும் புகார் மனுக்களை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். மக்கள், புகாரளிக்க வருவோரை மரியாதையுடன் நடத்தவும் அறிவுறுத்தினார். முன்னதாக எழுமாத்துாரில் உள்ள மாவட்ட காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், போலீசார் துப்பாக்கி சுடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

