/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பங்காரு அடிகளார் குருபீடத்துக்கு திருக்குடமுழுக்கு விழா
/
ஈரோட்டில் பங்காரு அடிகளார் குருபீடத்துக்கு திருக்குடமுழுக்கு விழா
ஈரோட்டில் பங்காரு அடிகளார் குருபீடத்துக்கு திருக்குடமுழுக்கு விழா
ஈரோட்டில் பங்காரு அடிகளார் குருபீடத்துக்கு திருக்குடமுழுக்கு விழா
ADDED : ஆக 30, 2025 01:15 AM
ஈரோடு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு, ஈரோடு நால்ரோடு அருகே உள்ள எல்.கே.எம். மருத்துவமனையில் இருந்து, கலைமகள் பள்ளி செல்லும் குமாரசாமி வீதியில் உள்ள குரு பீடத்திற்கு திருக்குட முழுக்கு விழா நடந்தது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை பெருந்தலைவர் செந்தில்குமார், பங்காரு அடிகளார் குருபீடம் திருக்குட முழுக்கு விழாவை நடத்தி வைத்தார். ஐந்து கால வேள்வி பூஜையில் வைக்கப்பட்டுள்ள கலசங்களின் புனித நீரால், திருக்குட முழுக்கு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, குருவின் உருவம் பதித்த குரு கொடி விழாவில் ஏற்றி வைக்கப்பட்டது. புனித கலசநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு, 162 இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. சமுதாய பணியாக ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருளாக மளிகை பொருட்கள், மூன்று சக்கர வாகனங்கள், கல்வி உதவித்தொகை, இஸ்திரி பெட்டி, தையல் மெஷின், லேப்டாப் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மறு அபிஷேகம் நடந்தது.
ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் குரு பீடம் தலைவருமான நடராஜன் தலைமையில், செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.