/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
/
தாராபுரத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED : ஆக 30, 2025 01:16 AM
தாராபுரம்,திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்த சதுர்த்தி ஊர்வலத்தில், 108 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, தாராபுரம் அமராவதி சிலை அருகே வள்ளி, கும்மி ஆட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில், பொதுக்கூட்டம் நடந்தது. பின்னர், விநாயகர் சிலை ஊர்வலத்தை, அனிதா டெக்ஸ் காட் சந்திரசேகர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், ஊர்வலம் கிளம்பியது.
ராஜ விநாயகர் சிலை முன்னே வர, நாதஸ்வரம், செண்டை மேளம் மற்றும் ட்ரம் செட்டுகள் முழங்க, பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றன. வசந்தா ரோடு, பூக்கடை சந்திப்பு, என்.என். பேட்டை வீதி, பைவ் கார்னர் வழியாக சென்ற ஊர்வலத்தில், பெண்கள் சிறிய விநாயகர் சிலைகளை ஏந்தி, அணிவகுத்து சென்றனர்.
நிறைவாக ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் அனைத்து சிலைகளும் இரவு, 7:00 மணியளவில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

