/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானியாற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
/
பவானியாற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED : ஆக 30, 2025 01:14 AM
அந்தியூர்,
அந்தியூரிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட, 21 விநாயகர் சிலைகள் பவானியாற்றில் கரைக்கப்பட்டன.அந்தியூர் ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்தியூர், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், 21 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, நாள்தோறும் சிறப்பு பூஜை நடந்தது.
நேற்று மாலை நடந்த விசர்ஜன நிகழ்ச்சியில், மேள தாளங்கள் முழங்க, 21 சிலைகளும் அந்தியூர் அடுத்த அண்ணாமடுவிலிருந்து, பஸ் ஸ்டாண்ட், சிங்கார வீதி, பர்கூர் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றன. 10 கி.மீ., ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சிலைகள் இரவு 7:00 மணிக்கு, அத்தாணியில் உள்ள பவானியாற்றில் கரைக்கப்பட்டன. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* சென்னிமலையில், ஹிந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வலம் நடந்தது. சென்னிமலை சுற்றுவட்டார பகுதிகளில், எட்டு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று மாலை அனைத்து சிலைகளும் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்து, போலீஸ் பாதுகாப்புடன் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. சென்னிமலை நான்கு ரத வீதி வழியாக ஊர்வலம் சென்று வாய்க்காலில் இரவு 7:30 மணிக்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்
பட்டன.
* கொடுமுடி ஒன்றியத்தில் ஹிந்து முன்னணி சார்பில், 15ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ரகுபதி, சிவகுமார், சின்னசாமி ஆகியோர், விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலத்தை காவிக்கொடி அசைத்து துவக்கி வைத்தனர். நகர பொதுச் செயலர் வீரலட்சுமி, ஜெகன் ஆகியோர் பங்கேற்றனர்.
கொடுமுடி பழைய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், மணிக்கூண்டு வழியாக கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் முன் உள்ள, புதிய படித்துறை காவிரி ஆற்றில், 15 விநாயகர் திருமேனி விசர்ஜனம் செய்யப்பட்டது.
* பெருந்துறை, கோட்டை முனியப்பன் கோவில் அருகில், பெருந்துறை ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், 9 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இதேபோல் மற்ற இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கோட்டை முனியப்பன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஊர்வலமாக அனைத்து சிலைகளும் புறப்பட்டு, பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெருந்துறை, வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டது.
காஞ்சிக்கோவில் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மதியம், 3:00 மணியளவில் காஞ்சிக்கோவில், நால் ரோட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கவுந்தப்பாடி அருகில் வைரமங்கலம் பவானி ஆற்றில் கரைக்கப்
பட்டது.