/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல் குவாரிக்கு விதிமீறி டெட்டனேட்டர் கொண்டு சென்ற வாகனம் சிறைபிடிப்பு

ADDED : அக் 05, 2024 06:12 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே பழையகோட்டை ஊராட்சி குட்டப்பாளையத்தில், தனியார் கல் குவாரி, 14 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆரம்பம் முதலே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குவாரியை தடை செய்ய, சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறைக்கு புகார் அனுப்பி வந்தனர்.
இதை தொடர்ந்து நாணல் வெடி, அதுவும் பகலில் மட்டுமே வைக்க வேண்டும் என்று குவாரி நிர்வாகத்துக்கு நிபந்-தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவாரிக்கு டெட்டனேட்டர் ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் நேற்று மாலை வந்தது. இதையறிந்த மக்கள், 50க்கும் மேற்பட்டோர் வாகனத்தை முற்றுகை-யிட்டு சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில், வெடிமருந்து வாகனத்தை எடுத்து சென்றனர். இதனால் மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.