sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

8 தொகுதிகளில், 3.25 லட்சம் பேர் நீக்கம் இடம் பெயர்வோரால் வாக்காளர் பட்டியலில் சரிவு

/

8 தொகுதிகளில், 3.25 லட்சம் பேர் நீக்கம் இடம் பெயர்வோரால் வாக்காளர் பட்டியலில் சரிவு

8 தொகுதிகளில், 3.25 லட்சம் பேர் நீக்கம் இடம் பெயர்வோரால் வாக்காளர் பட்டியலில் சரிவு

8 தொகுதிகளில், 3.25 லட்சம் பேர் நீக்கம் இடம் பெயர்வோரால் வாக்காளர் பட்டியலில் சரிவு


ADDED : டிச 29, 2025 09:45 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வாக்காளர் தீவிர திருத்த பணிக்கு பின் கடந்த, 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்-டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், 3.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்-பட்டனர். இரு இடங்களில் ஓட்டு உள்ளோர், 13,127, நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், 1,64,763, கண்டறியாதோர், 49,250, ஒத்து போகாதவர்கள், 44,353 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்படி, 16,71,760 வாக்-காளர் உள்ளனர். இந்நிலையில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் இரு தினங்களாக நடந்-தது. இதில் வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள, 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக காட்டலாம்..

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதா-வது: கொங்கு மண்டலம் குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவையில் அதிகளவில் வேலை வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு வேலை தேடி வருகின்றனர். அவ்வப்போது வேலைக்காக, வாழ்வியலுக்காக இடம் பெயர்-கின்றனர். இவ்வாறான செயல்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலும், நீக்கலும் அதிக-ளவில் காணப்படுகிறது.

இதனால் கொங்கு மண்டலத்தில் 'ஜம்பிங் ஓட்டர்ஸ்' (ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்-துக்கு செல்வோர்) அதிகளவில் இருப்பர். இதை தவிர்க்க முடியாது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்போர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதே போல் வட மாநில வாலி-பர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களது சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்-பட்டு இருப்பது குறித்து விசாரணை நடத்திய பின்னரே சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரண்டாவது நாளாக மாவட்டம், மாநகரில் நேற்றும் நடந்த வாக்காளர் சிறப்பு சேர் க்கை முகாமில், மக்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்-டினர்.






      Dinamalar
      Follow us