/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடந்த ஆறு மாதங்களில் 4,730 நாய்களுக்கு 'கு.க.
/
கடந்த ஆறு மாதங்களில் 4,730 நாய்களுக்கு 'கு.க.
ADDED : அக் 26, 2024 07:57 AM
,'
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஓராண்டுக்கு முன், தெருநாய் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 23,000 நாய்கள் இருப்பது தெரிய வந்தது. ஆனால், தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போன்ற பணி மேற்கொள்ளப்படாததால், இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
தெருநாய்களால் இதுவரை நுாற்றுக்கும் மேற்-பட்ட ஆடுகள், 150க்கும் மேற்பட்ட கோழிகள் கடி-பட்டுள்ளன. ஒரு பசு மாடும் நாய்களால் குதறப்-பட்டது. இதனால் நாய்களை கட்டுப்படுத்த, மக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்தது. இதை தொடர்ந்து தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி நிர்-வாகம் தொடங்கியுள்ளது.இதுகுறித்து மாநகர நல அலுவலர் கார்த்தி-கேயன் கூறியதாவது: மாநகராட்சியில் தினசரி, 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்று, தடுப்பூசி மற்றும் கருத்தடை பணி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 4,730 தெரு-நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்-டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.