/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வணிக வளாக கட்டடம் முதல்வரால் திறப்பு : தி.மு.க.,வினர் கூட பங்கேற்காமல் 'வெறிச்'

ADDED : பிப் 25, 2024 05:39 PM
ஈரோடு : ஈரோட்டில் ஆர்.கே.வி., சாலையில் மாநகராட்சி சார்பில், 29.85 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நேதாஜி வணிக வளாகம், முதல்வர் ஸ்டாலினால் காணொலி மூலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
காலை, 11:10 மணிக்கு வளாகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதை எல்.சி.டி., மூலம் பார்க்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சியில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், 50 பேருக்கு மேல் இருந்தும், மண்டல தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் ரமேஷ்குமார், காங்., கவுன்சிலர் ஈ.பி.ரவி என, ஐந்துக்கும் குறைவானவர்களே பங்கேற்றனர். நிகழ்ச்சி இடையே ஒரு சில கவுன்சிலர்கள் தலை காட்டி நகர்ந்தனர். தி.மு.க.,வினர் எவரும் தலைகாட்டாததால், விழா பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வழியாக சென்ற மக்கள், பக்கத்தில் இருந்த கடைக்காரர்களை அழைத்து வந்து, மாநகராட்சி ஊழியர்கள் அமர வைத்தனர்.